தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு! சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை இந்திய குடும்பங்கள் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.36,304-க்கு விற்பனையாகி வருகிறது.

அதைப்போல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து,ஒரு கிராம் ரூ.4,538-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version