Site icon SeithiAlai

தங்கம் விலை இன்று…அதிரடி குறைவு!!!

தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும். தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம். மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று பார்க்கப்படுகிறது.


இன்றைய 22 காரட் , ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட, 10 ரூபாய் குறைந்து 4,706 ரூபாய்க்கும், ஒருசவரன் ஆபரண தங்கத்தின் விலை 37, 648 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதே போல் 24 காரட் சுத்த தங்கம் கிராம் 4,942 ரூபாய்க்கும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 49,420 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 57 ரூபாய் 10 பைசாவுக்கும், 1கிலோ வெள்ளியின் விலை 57,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version