புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி… மத்திய அரசு அளிக்கும் நிதி!!

டி.ஆர் பாலு கோரிக்கையை ஏற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,
திமுக மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த மரியசாந்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த பிஜூ விக்டர் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவிடுமாறு கோரிக்கை வைத்தார். கோரிக்கை ஏற்று த
மரியசாந்தி மற்றும் பிஜூ விக்டர் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ .3,00,000 நிதியுதவியை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அலுவலகம் டி.ஆர் பாலுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து மரியசாந்தி மற்றும் பிஜு விக்டர் ஆகியோரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளுக்காக தலா 3 லட்சம் ரூபாய் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் , அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் வழங்கப்படும் என்றும் , சிகிச்சை முடிந்த பின்னர் உரிய ஆவணங்களின் நகலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆவணங்கள் கிடைத்த பின்னர் உதவித்தொகையானது . உடனடியாக மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இருதய சிகிச்சைக்காக பிரதமர் அலுவலகம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version