அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்… அரசு சுற்றறிக்கை

அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்; இல்லையென்றால் விடுமுறை என கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என டெல்லி அரசு சுற்றறிக்கை.

டெல்லி, கொரோனா இரண்டாம் அலையின் போது கடுமையான பாதிப்பை சந்தித்த நகரங்களில் டெல்லியும் ஒன்று! ஆக்சிஜன் இன்றியும், போதிய படுக்கை இன்றியும் ! உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்தது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவலின் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இனிமேல் பரவாத வண்ணம் பல்வேறு முயற்சிகளை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், வரும் 15ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், அனைத்து அரசு ஊழியர்கள்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பள்ளி கல்லூரியில் பணியில் உள்ள ஊழியர்கள் வரும் 15ம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளப்படாதவர்கள் 16ம் தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவதர்களின் பணிக்காலம் விடுமுறை தினமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்பதால் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை துறை சார்ந்த அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version