வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை – தலைமை செயலாளர் ஆலோசனை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வரவிருக்கின்றது. அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகமழை பெய்யும் மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என கொற்றியுள்ளார்.

Exit mobile version