ஏப்ரல் 14ம் தேதி நாடுமுழுவதும் பொதுவிடுமுறை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்நாளை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக சிறப்பித்து கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் அந்த நாளை அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுவிடுமுறையாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

Exit mobile version