இளம்பெண் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஹேர் பால் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் தான் ராபன்ஸல். இவர் தனது சொந்த முடியை உண்டுள்ளார். பிறகு அவர் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முடி சேர்ந்துள்ளது. தற்சமயம் 48 சென்டிமீட்டர் அளவில் உருண்டையாக உருவான அந்த முடியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். பதின் பருவ வயதை கொண்ட ராபன்ஸல் வெகுநாட்களாக நோய் அறிகுறிக்கு ஆளாகியுள்ளார். ஆனால் அது எந்த வகையான நோய் என்பதை கண்டறிவது மருத்துவர்களுக்கு மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. பிறகுதான் இது கூந்தலை (ட்ரைக்கோபாகியா) உட்கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் அரிதான குடல் நோய் என்று தெரிந்தது.
நீர் வீழ்ச்சியில் ஈடுப்பட்ட போது அவருக்கு இரண்டு முறை மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் முகம் மற்றும் உச்சந்தலையில் சிராய்ப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வயிற்றில் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவரது வயிற்றில் உட்புற புறனியில் ஏதோ பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவரது வயிற்றில் முடி இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ட்ரைக்கோ டிலோமேனியா என்னும் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. உண்ட முடியானது உடலுக்கும் ஒரு பந்து போல வளர்ந்து வந்துள்ளது. பிறகு அதில் வயிற்றில் பெரிய உருளையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்து 48 செண்டி மீட்டர் உள்ள அந்த உருளை முடி பந்தானது எடுக்கப்பட்டது.
தேசிய அமைப்பின் கூற்றுப்படி, உலகில் 0.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ட்ரைக்கோட்டிலோமேனியாவை அனுபவிக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், 16 வயதான ராபன்ஸல் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரது வயிற்றில் அந்த முடி பந்து ஆபத்தான அளவில் நோய் தொற்றை ஏற்படுத்தியிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் அந்த முடி உண்ணும் பழக்கத்தில் இருந்து விடுப்பட்டுள்ளார்.