மழைக் காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?

இந்த பொருட்கள் இருந்தால் போதும்; முடி உலர்ந்து உடையும் கவலை இனி இல்லை

மழைக்காலம் என்றாலே தலைமுடிக்கு தொந்தரவுகள் அதிகம். ஈரப்பதம், எளிதில் உடையும் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அதற்காக மழைக்காலத்திற்கு ஏற்றவாறு பொருட்கள் உபயோகித்தால் தலைமுடியை மிருதுவாக, அடர்த்தியாக பராமரிக்க முடியும்.

  1. எண்ணெய்

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை தரமாக செக்கில் தயார் செய்து, சூடாக்கி தலையில் தேய்த்து வர, தலைமுடி மிருதுவாக, உடையாமல் இருக்கும். முடி கொட்டுவது குறையும்

  1. சிலிக்கோன் சேர்க்கப்பட்ட ஷாம்பூ/கண்டிஷனர் (Shampoo /serum /Conditioner with silicone)

கடைகளில் தலைமுடிக்கான பொருட்கள் வாங்கும்போது சிலிக்கோன் சேர்க்கப்பட்டது வாங்கினால், முடி ஒன்றோடு ஒன்று சேர்ந்து சிடுக்காகாமல் மிருதுவாக இருக்கும். தலைமுடிக்கு பளபளப்பு தரும்.

  1. ஜின்க் பைரித்தின் (Zinc pyrithione)

மழைக்காலத்தில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு ஏற்ற பொருளாகும். இதை, எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பூ, கண்டிஷனர் இவைகளுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நன்மை கிடைக்கும்.

இந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால் மழைக்காலத்தில் தலைமுடியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்

Exit mobile version