நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை,  https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தின் மூலம், மாணவர்கள்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாததால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுக்குறித்து மத்திய அரசு கூறுகையில்,  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தேர்வு நடத்தப்படுவதாகவும், தேர்வின் போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்ததான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version