கொரோனா தொற்றிலிருந்து … மீண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர்…!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்மன்பிரீத் கவுர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார்.

இந்திய மகளிர் அணி 20 ஓவர் கிரிக்கெட் அணியின், கேப்டனாக இருப்பவர் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் அவர் குணம் அடைந்துள்ளதாக ,தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கொரோனா பரிசோதனை எனக்கு செய்தபோது ,தொற்று இல்லை என்று நெகட்டிவாக ,முடிவு வந்திருப்பதாக கூறினார்.

இதனால் எனக்கு தொற்று இல்லை என்பதை ,அனைவரிடமும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகவும், நான் நன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அனைவரும் தங்கள் உடல்நலத்தில்,அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்படி ,அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .

Exit mobile version