கேரளாவில் கனமழை – 5 பேர் பலி

கேரளாவில் பருவக்கால மழைப்பொழிவை முன்னிட்டு, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.சில மாவட்டங்களுக்கு ரெட் அல்ர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழையால் சாலை எங்கிலும் நீர் சூழ்ந்துக் காணப்படுகிறது.பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து மற்றும் மின்கம்பங்கள் அறுந்துள்ளன.இதன் காரணமாக பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை அதிகனமழைக்கான ரெட் அல்ர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு அல்ர்ட் வானிலை மையம் விடுத்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.மேலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கொரோனா தொற்றும் பரவி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

Exit mobile version