ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து… பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!!


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார். என்ன பேசினார் என்பதை தமிழில் பார்க்கலாம்.

டெல்லி,
MI17V5 ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 14 பேருடன் ( 08.12.2021) காலை 11.48 மணிக்கு புறப்பட்டது. நண்பகல் 12.15 மணிக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் சென்று இறங்க வேண்டும்; ஆனால் 12.08 மணிக்கு ஹெலிகாப்டர் உடனான தொடர்பு, சூலூர் விமான கட்டுப்பாட்டு அறையுடன் துண்டித்தது. உள்ளுர் மக்கள் குன்னுர் வனப்பகுதியில் அடர்ந்த தீ எரிவதை கண்டுள்ளனர்; அருகில் சென்று பார்த்தபோது அவை ஒரு ராணுவ ஹெலிகாப்டர் என மக்கள் கண்டுள்ளனர். பின்னர் உள்ளூர் மீட்பு படையினர் உதவியுடன் 14 உடல்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

இதில்,

  1. பிபின் ராவத் ( முப்படை தளபதி )
  2. மதுலிகா ராவத் ( மனைவி )
  3. லக்பிந்தர் சிங் லிட்டர்
    4.கார்னல் ஹர்ஜிந்தார் சிங் 9 விமானப்படை அதிகாரிகள் :
  4. விங் கமாண்டர் பிருதிவி சிங் சவுகான்
  5. குல்தீப் சிங்
  6. ராணா பிரதாப் தாஸ்
  7. அராகால் பிரதீப்
    5.சத்பால் ராய்
    6.நாயக் குரு சேவக் சிங்
    7.நாயக் ஜிதேந்தர் குமார்
    8.லென்ஸி நாயக் விவேக் குமார்
    9.சாய் தேஜா

மேலும் ஒருவரான குரூப் கேப்டன் வருண்குமார் சிங், லைப் சப்போர்ட் ( Life Support ) உதவியுடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரை காப்பாற்ற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், விபத்து தொடர்பாக “Try Service Enquire” ஏர் மார்ஷல் மாவேந்திரா சிங் (காமாண்டனிங் தலைமை அதிகாரி ) தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று மாலை 6-6.30 மணி அளவில் ராணுவ விமானம் மூலம் உயிரிழந்த வீரர்கள் மற்றும் முப்படை தளபதியின் மனைவி ஆகியோர் உடல் டெல்லி (பாலம் விமான நிலையம்) விமானப்படை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் மீதமுள்ள 12 பேருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.

அவையில் விளக்கம் அளிப்பதற்கு முன்னதாக அவை உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version