வரலாற்றில் இன்று!!!

உடலுக்குள் இருக்கும் உறுப்புக்கள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம்தான் சி.டி. ஸ்கேன்.(C T Scan). சாதாரண எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை முறை.இதில் கதிர்வீச்சின் அளவும் அதிகம் என்பதால் பரிசோதனை செய்துகொள்பவருக்கு ரிஸ்க்கும் அதிகம். இந்தப் பிரச்னையைக் கவனத்தில் கொண்டு, ஒருமுறை பரிசோதிக்கும்போதே இரண்டு பரிமாணத்தில் (2டி முறை) கண்டு பிடிக்கும் வகையில் சி.டி. ஸ்கேன் வடிவமைக்கப்பட்டது.

எக்ஸ்ரேவைவிட இன்னும் தெளிவாக, விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பதும் சி.டி. ஸ்கேனின் இன்னொரு சிறப்பு.இந்த சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1989 July 19)

ஜூலை 19, விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் ரொனால்ட் டி மே வாரன் நினைவு தினம் இன்று.

இவரது தந்தை 1934 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவர் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியானார். 1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார்.

1953இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார். விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார்.

விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார். நீர் உள்ளே புக முடியாத அளவுக்கு இருக்கமான பெட்டிக்குள் இந்த ஒலிப்பதிவு கருவிகள் வைக்கப்பட்டன. ஓலி அலைகளை உணர்ந்து உள்வாங்கும் சென்சார்கள் வெளிப்புற மூடியில் பொருத்தப்பட்டன 1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் ‘ கருப்பு பெட்டி’ பொருத்தப்பட்டது.

Exit mobile version