பீமன் போல் வலு பெற வேண்டுமா? வாங்க தயாரிக்கலாம் சத்துமாவு!

காலை டிபன், கஞ்சி, சிற்றுண்டி, சப்பாத்தி பூரி போன்ற பல வகைகளில் பயன்படுத்த மிகவும் ஊட்டச்சத்து கொண்ட இந்த சாது மாவை செய்து பாருங்கள். சுலபமாக நீங்களே வீட்டில் செய்து அனைவரையும் அசத்துங்கள்.
கேழ்வரகு                                 200கி
கம்பு 200கி
சிகப்பு அரிசி100கி
சம்பா கோதுமை 100கி
சோளம் 100கி
பாசி பயறு100கி
சோயா பீன்ஸ் (Soya Beans)100கி
மக்கா சோளம் 50கி
பொட்டுக்கடலை 50கி
திணை 50கி
கொள்ளு 50கி
ஜவ்வரிசி 50கி
பார்லி 50கி
பாதாம் 10
ஏலக்காய் 5
உலர்ந்த இஞ்சி 1” Piece

விரும்பினால்:

வேர்க்கடலை 50கி
கருப்பு அரிசி 100கி
மற்ற தானியங்கள் 50கி
மசூர் பருப்பு 50கி
உலர்ந்த பச்சை பட்டாணி 50கி
கருப்பு கடலை 50கி
ஆளி விதை 50கி

எப்படி உட்கொள்வது:

கஞ்சி:

1 ஸ்பூன் மாவுடன் 1 கப் தண்ணீர், 1/4 ஸ்பூன் உப்பு போட்டு மிதமான தீயில் கிளறுங்கள். மாவு வெந்து, கெட்டியானவுடன் இறக்கி மோர் கலந்து குடியுங்கள்.

இனிப்புக் கஞ்சி

வெல்லம் அல்லது பனை வெல்லம் எடுத்து, அதை 1/2 கப் தண்ணீர் விட்டு, அடுப்பில் உருக்கி வடிகட்டுங்கள். பிறகு, முன்பு போல தண்ணீர் அல்லது பாலில் மாவை வேகவைத்து, இந்த வெல்லத்தை ஊற்றி கலக்குங்கள்.

புட்டு:
இந்த மாவை புட்டு மாவாகப் பயன்படுத்தலாம். அரிசி மாவு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சப்பாத்தி மாவு:
மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட இந்த மாவு 1/4 சேர்த்து, அதனுடன் 2 கப் கோதுமை மாவு கலந்து சப்பாத்தி, பூரி இவை செய்யலாம்.

சிற்றுண்டி:
இந்த மாவுடன் சிறிது பொடித்த சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மாலை சிற்றுண்டியாக பயன்படுத்தலாம். நெய் கலந்து லட்டு போல பிடித்து உண்ணலாம். மிகவும் சுவையாக இருக்கும்

தினமும் உணவில் ஊட்டம் கூடி, உடலும் மனதும் வலு பெற்று வாழுங்கள்!

Exit mobile version