இன்றைய சதி கோட்பாடு: ஹோமி பாபாவின் (Homi Bhabha) கொலை பற்றியது!

இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை’ ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதி கோட்பாடு.

1966 ஆம் ஆண்டு ஜனவரி மதம் 24ஆம் தேதி ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த விமானம் சுவிட்சர்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அகால மரணம் அடைந்தார்.

தோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.

ஜூலை மாதம் 11 ஆம் தேதி பத்திரிகையாளர் கிரிகோரி டக்ளஸ் (Gregory Douglas) என்பவருக்கும் CIA அதிகாரி ராபர்ட் டீ கிரௌலி (Robert டீ Crowley) என்பவருக்கும் நடந்ததாக ஒரு உரையாடல் வெளியிடப்பட்டது. இதில் ஹோமி பாபா அவர்களது இறப்பில் CIA பங்கு வகித்ததாக தெரிகிறது.

ஆனால், இந்த சதிகோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான ஆதாரமும் இல்லை.

Exit mobile version