ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா…?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் இந்த மூன்று முறைகளை கவனத்தில் கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. அதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவில் விரும்புகின்றனர். இது மிகவும் எளிதாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

அதில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கே அதிக அளவில் இருந்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானதா? என்று நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சமீபகாலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து வருகிறது .அதுவும் ஆன்லைனில் மோசடி செய்வது என்பது மிகவும் அதிகரித்துள்ளது.

முதலில் உங்கள் OTP யை சரிபார்க்க வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையின் போது பெரும்பாலும் மக்களுக்கு OTP செய்தி அனுப்பப்படும். அதை சரி பார்க்காமல் OTP யை டைப் செய்கிறார்கள்.

முழுமையாக என்ன குறுஞ்செய்தி வந்துள்ளது என்பதை தெரிந்த பிறகே டைப் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு புதிய இணையத்தில் ஷாப்பிங் செய்யும்போது அல்லது கட்டண விருப்பத்திற்கு செல்லும் போது முதலில் URL ஐ HTTP: // க்கு பதிலாக HTTPS: // உடன் தொடங்கவும், ஏனெனில் இது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.

கடவுச்சொற்களை மிக எளிதாக வைத்திருக்கும் பலர் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் எப்போது உங்கள் கடவுச்சொல்லை மாற்றி ஒவ்வொரு முறையும் வலுவான கடவுச்சொல்லை வைத்திருப்பது அவசியம்.

கடவுசொல்லில் உங்களது பெயரையும் அல்லது உங்களது பிறந்த தேதியையும் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Exit mobile version