ராம்நாத் கோவிந்தை மோடி புறக்கணிப்பு… வைரலாகும் வீடியோ

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் (ஜூலை 24) முடிவடைகிறது. இந்த நிலையில் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி புறக்கணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி இன்று மாலை 7 மணியளவில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த உரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இருக்கும். இந்த உரை, இந்திய வானொலி, தூர்தர்ஷன் மற்றும் அனைத்து அலைவரிசையிலும் ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை புறக்கணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு வணக்கம் சொல்ல அவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்தப்படி அவரை கவனிக்காமல் இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் போட்டோ எடுக்கும் போது குறுக்கே வந்தால் எப்படி கவனிப்பது என்றும் எல்லா மரியாதையும் பதவியில் இருக்கும் வரை மட்டும்தான் எனவும் மோடியை கலாய்த்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version