SETC : ஆகஸ்டு 3 முதல் பார்சல் சேவை… 80 கிலோ பொருள் அனுப்ப கட்டணம் ₹210

ஆகஸ்டு 3ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிறபகுதிகளுக்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோக்கித்துக் கொள்ளலாம்.

சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்பட பிரபலமான பொருட்கள் அனைத்தையும் அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம். பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி (331 கி.மீ) தினசரி வாடகை ₹210. மாத வாடகை ₹6,300, மதுரை (459 கி.மீ) தினசரி வாடகை ₹300, மாத வாடகை ₹9,000, கோவை (510 கி.மீ) தினசரி வாடகை ₹330, மாத வாடகை ₹9,900, சேலம் (341 கி.மீ) தினசரி வாடகை ₹210, மாத வாடகை ₹6,300, நெல்லை (622 கி.மீ) தினசரி வாடகை ₹390, மாத வாடகை ₹11,700, தூத்துக்குடி (601 கி.மீ) தினசரி வாடகை ₹390, மாத வாடகை ₹11,700.

செங்கோட்டை (645 கி.மீ) தினசரி வாடகை ₹390, மாத வாடகை ₹11,700, நாகர்கோவில் (698 கி.மீ) தினசரி வாடகை ₹420, மாத வாடகை ₹12,600, கன்னியாகுமரி (740 கி.மீ) தினசரி வாடகை ₹450, மாத வாடகை ₹13,500, மார்த்தாண்டம் (728 கி.மீ) தினசரி வாடகை ₹450, மாத வாடகை ₹13,500, திண்டுக்கல் & காரைக்குடி (428 கி.மீ) தினசரி வாடகை ₹270, மாத வாடகை ₹8,100, ஒசூர் (317 கி.மீ) தினசரி வாடகை ₹210, மாத வாடகை ₹6,300, நாகப்பட்டினம் (353 கி.மீ) தினசரி வாடகை ₹240, மாத வாடகை ₹7,200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version