இரவிலும் தேசியக்கொடியை பறக்க விடலாம்…

இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக, தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமானால் சூரிய உதயத்திற்கு பின்பாக ஏற்றி சூரியன் மறைவிற்கு (அஸ்தமனத்திற்கு) முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. மேலும், நமது நாட்டில் எந்திரத்தால் செய்யப்பட்ட தேசிய கொடிக்கும், பாலியஸ்டர் தேசிய கொடிக்கும் அனுமதி கிடையாது. இந்த நிலையில் இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின் படி, தேசியக்கொடி எந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம். அது பருத்தி, கம்பளி, பட்டு, காதி ஆகியவற்றால் செய்யப்பட்டு  இருக்கலாம். பொதுமக்கள் வீடுகளில் பகலில் மட்டுமல்லாது, இரவிலும் பறக்க விடலாம் என மாற்றம் செய்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு  ‘ஹர் கார் திரங்கா (வீடுகளில் மூவர்ணக்கொடி)’ என்ற இயக்கத்தை அறிவித்தது. இதன்படி, ஆகஸ்டு 13ம் தேதி முதல் ஆகஸ்டு 15ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version