‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவதற்கு கட்டணம் கிடையாது!

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டால் அதற்கான மாதாந்திர கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது பொய்யான தகவல். எதிர்கட்சிகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர  கட்டணம் வசூலிக்கப்படாது. அடிதட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டது” என்று கூறினார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version