குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய டிபன் மெனு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் வழங்கும் திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் வழங்கப்படும் சிற்றுண்டி விவரம்:

திங்கள் கிழமை: காலையில் ரவா உணவு வகை உப்புமா வழங்கப்படும். அரிசி,ரவா, கோதுமை, சேமியா இவற்றில் ஏதாவது ஒன்று காய்கறி சாம்பாருடன் வழங்கப்படும்.

செவ்வாய்க்கிழமை: கிச்சடி வகை உணவு வழங்கப்படும். ரவா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி இவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

புதன்கிழமை: ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.

வியாழக்கிழமை:உப்புமா வகை உணவு வழங்கப்படும்.

வெள்ளிக்கிழமை: கிச்சடியுடன் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும்.

ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு காலையில் வழங்கப்படும் உணவுக்கான அளவு: அரிசி, ரவா,கோதுமை,சேமியா இவற்றில் ஏதாவது ஒன்று 50 கிராம் அளவு இருக்க வேண்டும். சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version