மோடியின் புகைப்படத்தை கருப்பு மை கொண்டு அழித்த பெரியாரியவாதி கைது செய்யப்பட்டார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழக அரசு வைத்த விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்படவில்லை என்று கூறி இன்று காலை பாஜகவினர் மோடியின் புகைப்படத்தை ஒட்டினர். இந்த சம்பவம் பெரும் விவாதமான நிலையில், பேனர்களில் ஒட்டப்பட்ட மோடியின் புகைப்படத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு மை கொண்டு அழித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, #Go Back Modi என்ற செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிவிப்பானது, சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. அதாவது, எதிர்கட்சியாக இருக்கும் போது #Go Back Modi என திமுகவினர் டிரெண்ட் செய்தனர். கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். தற்போது, பாஜகவிற்கு திமுக அரசு அடிபணிந்து விட்டதா? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கருப்பு மை கொண்டு அழித்த பெரியாரியவாதி கைது செய்யப்பட்டார்.
-பா.ஈ.பரசுராமன்.