அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை… ஆகஸ்டு 17 முதல் ஆரம்பம்

கேரளாவில் அரசு சார்பில்  ‘ஆன்லைன் டாக்சி’ சேவை  தொடங்கப்படவிருக்கிறது.

கேரளா மாநிலத்தில் அரசு சார்பில்  ‘கேரளா சவாரி’ என்ற பெயரில் ஆன்லைன் டாக்சி சேவை ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாட்டில் ஒரு மாநில அரசு ஆன்லைன் சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும்’ என்று கூறினார். கேரள அரசின் இந்த கேரளா சவாரி திட்டம் , மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version