தபால் நிலையங்களில் ‘தேசியக்கொடி’ விற்பனை

நாடு முழுவதும் 1.6 லட்சம் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்டு 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், தேசிய கொடியை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேசியக்கொடியை தயாரிக்கும் பணியில் பெண்கள் சுய உதவி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், தேசியக்கொடி சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, பாலிஸ்டர், காட்டன், பட்டு, எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடியை பயன்படுத்தலாம். இரவு நேரங்களிலும் பறக்க விடலாம் என திருத்தம் செய்துள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version