யூட்யூப்பை பார்த்து பள்ளிச்சிறுவன் (12) ஒயின் தயாரித்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 12வயது பள்ளிச்சிறுவன் யூட்யூப்பை பார்த்து ஒயின் தயாரிக்க முயற்சி செய்துள்ளான். அதற்காக, வீட்டிலிருந்த திராட்சை பழத்தை சாறாக்கி ஒரு பாட்டிலில் அடைத்து வீட்டுத்தோட்டத்தில் புதைத்துள்ளான். பின் சிறிது நாட்கள் கழித்து அதை தோண்டி எடுத்து தனது சக பள்ளி மாணவனுக்கு இது நான் தயாரித்த ஒயின் சாப்பிட்டுப்பார் என்று கொடுத்துள்ளான்.இதை சாப்பிட்ட அந்த மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த நிலையில் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த மாணவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் சகமாணவன் ஒயின் கொடுத்த விசயத்தை ஒப்புக்கொண்டான். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த ஒயினில் ஆல்கஹால் கலக்கவில்லை என்று கூறியுள்ளான். தனது மகன் ஏதோ தயாரிக்கிறான் என்று தெரியும். அது ஒயின் என்று தெரியாது என ஒயின் தயாரித்த மாணவனின் தாயார் கூறியுள்ளார். ஆல்கஹால் கலந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர். பெற்றோர்களே உங்கள் வீட்டு குழந்தைகள் ஏதேனும் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தால் கவனியுங்கள்.
-பா.ஈ.பரசுராமன்.