Site icon SeithiAlai

உன் மார்பில் என் பெயரை பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் காதலன் கொடுத்த டார்ச்சர்

கன்னியாகுமரி அருகே காதலர் ஒருவர் தன் காதலியின் மார்பில் பச்சை குத்தி கொள்ள டார்ச்சர் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வாலிபர் (28) ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

மாணவியான காதலியை அந்த வாலிபர் உருகி, உருகி காதலித்துள்ளார். நீ  இல்லாமல் நான் இல்லை. நான் உயிர்வாழ்வதே உனக்காகத்தான், அன்பே! என்றெல்லாம் காதல் வசனங்களை பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உனது மார்பில் என் பெயரை பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதுவரை பொருத்திருந்த மாணவி காதலனின் டார்ச்சர் தாங்க முடியாமல், தனது பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது மாணவியை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அந்த மாணவி வேண்டும் என்றும் கூறி வருகிறார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Exit mobile version