தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஆகஸ்டு 3ம் தேதி முதல் ஆகஸ்டு 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் 3 நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா,லட்சத்தீவுகள்,கேரளா-கர்நாடக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய பகுதிகள் & இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version