காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போலீஸ் தடுப்புகளை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
’நேஷனல் ஹெரால்டு வழக்கில்’ அமலாக்கத்துறை சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில் நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைத்தது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவையில் பேசிக்கொண்டிருக்கும் போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.தலைவர் சோனியாகாந்தி வீட்டின் முன்பும் காவல்துறையை குவித்துள்ளது. இது நியாயமா?என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இந்தியாவில் ஜனநாயகமே இல்லை. நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தியாவை செங்கல், செங்கல் ஆக பாஜக அரசு பிரித்துக் கொண்டிருக்கிறது. நான் எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ தாக்குகிறேனோ அதற்கான கடுமையான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும் என்று எனக்குத்தெரியும். அதைபற்றி எனக்குக் கவலையில்லை. என்னை தாக்குங்கள் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில் பிரியங்கா காந்தி காவல்துறையின் பேரிகார்டை தாண்டிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.