மாணவிகளால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் SSLV மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆனால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்

தமிழக அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை கொண்ட செயற்கைக்கோளையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்த முடியும். ஆனால், எஸ்எஸ்எல்வி மூலம் 500 கிலோ வரை  எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். அந்த வகையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் 144 கிலோ எடை கொண்ட இஒஎஸ் – 02 செயற்கைக்கோளும், 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.(ஆசாதி சாட் செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது)

இந்த நிலையில், செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோம்நாத் தெரிவிக்கையில், “எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.ராக்கெட்டின் அனைத்து கட்டங்களிலும் எதிர்பார்த்தப்படி ராக்கெட் சென்றது. ஆனால் ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை.சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஓஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.இது தொடர்பாக அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்” என்றார்.

Exit mobile version