மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, புதுச்சேரி அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (ஆகஸ்டு 9) மொஹரம் பண்டிகையை ஒட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு 20ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.