கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவாக்சின் அல்லது கோவிசீல்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவாக்சின் அல்லது கோவிசீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்திக்கொண்டார்களோ அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பெயரிலான தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றது. கோவாக்சின் அல்லது கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தி 6 மாதம் ஆனவர்கள் இந்த தடுப்பூசியை பூஸ்டராக  செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version