பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

8வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில் அதில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். பின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறினார். இந்நிலையில் இன்று பீகார் ஆளுநர் பகுசவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நிதிஷ் மகாகட்பந்தன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். பீகாரின் துணை முதல்வராக லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

Exit mobile version