சுதந்திர போராட்ட வீரர் தாதாபாய் ரவுரோஜியின் லண்டன் வீட்டுக்கு ப்ளு பிளேக் என்ற புதிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தாதாபாஜ் நவுரோஜி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் முதுபெரும் கிழவர் என்றும் அழைக்கப்பட்டார். இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு தாதாபாய் நவுரோஜி, தெற்கு லண்டனில் 8 ஆண்டுகள் வாழ்ந்த வீடு நீலப்பலகையுடன் (ப்ளூ பிளேக்) கவுரவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்த நீலப்பலகை திட்டம் என்பது ‘இங்கிலீஷ் ஹெரிடேஜ்’ தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்களில் வரலாற்று முக்கியத்துவத்தை மதித்து போற்றி கவுரவிக்கிறது. அந்த வகையில், தாதாபாய் நவுரோஜியின் சிவப்பு செங்கல் வீட்டில் இப்போது, தாதாபாய் நவுரோஜி (1825-1917) இந்திய தேசியவாதி மற்றும் எம்பி இங்கு வாழ்ந்தார் என்று நீலப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாதாபாய் நவுரோஜி இங்கிலாந்திற்கு 7 பயணங்களை மேற்கொண்டார். லண்டனில் தனது நீண்ட ஆயுளில் 30 வருடங்களுக்கு மேலாக கழித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.