மருமகளின் தலையை வெட்டி கொண்டு வந்த மாமியார் அதிர்ச்சி சம்பவம்

மருமகளின் தலையை மாமியார் வெட்டிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவர் தன்னுடைய மருமகள் வசுந்தராவின் தலையை வெட்டி  எடுத்துவந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பச் சண்டை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், வசுந்தராவின் வீட்டுக்காரர்கள் சுப்பம்மாவை தாக்கியுள்ளனர். இதில் கோபமடைந்த சுப்பம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசுந்தராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியை எடுத்து அவரின் (வசுந்தராவின்) தலையை அறுத்துள்ளார். பின் காவல்நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version