பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ₹97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில்கள் தற்போது புதுடெல்லி – வாரணாசி, புதுடெல்லி – வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது. இதன் இறுதிகட்ட ஆய்வுகளை மேற்பார்வையிட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐசிஎப்க்கு வருகை புரிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
