அமுல் பால்விலை லிட்டருக்கு ₹2 உயர்வு

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.

கடந்த வாரம் பால் விலை லிட்டருக்கு ₹4 உயர்த்தப்பட்டதற்கு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதில், தமிழக அரசு தலையிட்டு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது.இந்த நிலையில், ஹட்சன்,சீனிவாசா போன்ற தனியார் நிறுவனங்களின் பால்விலை உயர்வை தொடர்ந்து தற்போது அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, பால்விலை லிட்டருக்கு ₹2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, ஆவின் நிறுவனம் கோல்ட் காபி (cold coffee), பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி உள்பட 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பால்பொருட்களின் விற்பனையை ஆகஸ்டு 20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கிறார்.

Exit mobile version