அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேகதிசை மாறுபாடு காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், நீலகிரி,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரளா-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version