மதங்களை விட மனிதநேயம் மேலானது…

மதங்களை விட மனிதநேயம் மேலானது என்ற கேப்சனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், கோயிலுக்கு சாமி கும்பிட வரும் தம்பதி ஒன்று பைக்கை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்புகின்றனர். பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு சற்றுதூரம் செல்வதற்குள் அப்பெண்ணின் தாவணி பைக்கின் பின் வீலில் சிக்கி மாட்டிக்கொள்கிறது. தாவணி இல்லாமல் தெருவில் என்ன செய்வதென்று தெரியாமல் அப்பெண் நிற்கிறார். கணவனோ தாவணியை எடுக்க முயற்சி செய்தும் தாவணி வரவில்லை. அப்போது, அந்த வழியாக வரும் இஸ்லாமிய பெண் ஒருவர் பதறிபோய் தனது துப்பட்டாவை கழற்றிக்கொடுத்து அப்பெண்ணின் மானத்தை காப்பாற்றுகிறார். இருவரும் கண்ணீர் மல்க, அந்த இஸ்லாமிய தம்பதிக்கும் நன்றி கூறும் விதமாக அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Exit mobile version