முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 1 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து போன் செய்த நபரின் செல்போன் எண்ணை விசாரணை செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சிறுவன் புவனேஸ் என்பது கண்டறியப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் இருக்கும் அந்த சிறுவன், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர் ஒருவரின் செல்போனை எடுத்து அவருக்கு தெரியாமல் பேசியுள்ளார். இதுபோன்று பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் புவனேஸ் மீது காவல்நிலையங்களில் 9க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.