அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் பெயில்… பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு

அசாம் அரசு நடத்திய 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் பெயிலானதை தொடர்ந்து பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அசாம் கல்வித்துறையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அசாமில் அரசால் நடத்தப்படும் 34 பள்ளிகளில் படித்து வந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை என தெரிவித்துள்ளது.

அசாமின் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு கூறும்போது, பூஜ்ய தேர்ச்சி விகிதம் கொண்ட இந்த பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடுவது என்பது அர்த்தமற்றது. ஒரு சில பள்ளிக்கூடங்களில் 2 அல்லது 3 மாணவர்களே உள்ளனர். தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத நிலையில், அந்த பள்ளி இல்லாமல் இருப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.

Exit mobile version