15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

15வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் கார்ஹொன் மாவட்டம் நிமர் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை இரண்டுபேர் பின் தொடர்ந்துள்ளனர். பிறகு அந்த ஆண் நண்பருடன் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அவரது வீட்டருகே விட்டுச்சென்றுள்ளனர்.

இதையடுத்து சிறுமி, தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Exit mobile version