வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, இறங்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version