சர்க்கரை கலக்காத திருப்பதி லட்டு ஆ….?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்க்கரை இல்லாத லட்டு வழங்கப்படும் என்ற தகவலுக்கு தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி கோவிலில் தயார் செய்யப்படும் லட்டுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்க கடலை மாவு, சர்க்கரை,முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அதன் சுவை, மனம், எடை மாறாத வகையில் லட்டு தயாரிப்பதால் புவிசார் காப்புரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 நாட்களாக நீரிழிவு  நோயாளிகளுக்காக திருப்பதி லட்டில் சர்க்கரை கலக்கப்படாது என இணையதளத்தில் தகவல் பரவியது.

இந்த தகவல் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சர்க்கரை இல்லை என்றால்  புவிசார் உரிமை பற்றி கேள்விக்குறியாகி விடும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கினால், பிறகு வேறு ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து வேறு சில பக்தர்கள், மற்ற பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் ஏழுமலையான் கோயில் பிரசாதத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version