தமிழ்நாட்டில் பெரிய அளவில் காய்ச்சல் இல்லாததால் விடுமுறை அவசியம் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை, ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என சில செய்திகள் உலா வருகின்றன. நிர்வாக ரீதியாக ஒரு சிலரை பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அரசின் மீது உள்ள கோபத்தில் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.