மனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் கொண்டு கள்ளக்காதலனை கொன்று நள்ளிரவில் அவரின் சடலத்தை ஏரியில் புதைத்த கணவர்.

பெரிய காஞ்சிபுரம் , ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ஆக்டிங் கார் டிரைவர் ரவிச்சந்திரன். இவருக்கும் காரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக காமாட்சிக்கும், காரை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தினேஷ் என்பருக்கு வயது வெறும் 27 தான். இவர்களின் தொடர்பு அதிகரித்து நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ரவிச்சந்திரன், பலமுறை மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இந்தவேளையில், கடந்த 10 நாட்களுக்கு முன் காமாட்சி, தினேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். பின்னர், காரை கிராமத்துக்கு இருவரும் வீடு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரவிச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது அங்கு தினேஷ், காமாட்சியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதில் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில், தினேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனை தொடர்ந்து காமாட்சியின் கணவர் அந்த சடலத்தை பொக்லைன் வாகனத்தில் தூக்கி சிறுவாக்கம் ஏரிக்கரைக்கு சென்றார். அங்கு, பள்ளம் தோண்டி உடலை புதைத்து விட்டு தலைமறைவானார். இந்நிலையில், நேற்று மதியம் ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் சரணடைந்தார். பின்னர் அவர் தினேஷ் அவர்களை கொலைசெய்ததற்கு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுதது போலீசார், வழக்கு பதிவு செய்து, காஞ்சிபுரம் தாசில்தார் பவானி முன்னிலையில் சிறுவாக்கம் கிராம ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு, புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தை தோண்டி எடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.