பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற மகளிர் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின், தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் இல்லாத ஒருவர் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.