தமிழகத்தின் அடையாளமாக திகழும் நம் காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார்.
திமுக மகளிர் அணி தலைவரும், எம்.பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும் மிகவும் மாசு பட்டிருப்பதாகத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மருந்து கழிவு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றால் காவிரி மாசுபட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. தமிழகத்தின் அடையாளமாக திகழும் நம் காவிரியை மாசுபடுவதில் இருந்து தடுக்க காவிரியை பாதுகாக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.