கொரோனா சான்றிதழ் இல்லை என காக்க வைக்கப்பட்ட பெண்… ஆம்புலன்ஸிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்…

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா சான்றிதழ் இல்லாத பெண்ணுக்கு எந்தவொரு மருத்துவமனையும் சிகிச்சையளிக்க மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவரின் தாயார் ஜெயம்மாவிற்கு (50) கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரதீப் ஜெயம்மாவை ஆம்புலன்ஸில் அழைத்துக் கொண்டு ஹைதராபாத் மாநகரில் உள்ள பல மருத்துவமனைக்கு சென்றபோது, கொரோனா சான்றிதழ் இல்லாத காரணத்தால் எங்கையும் அனுமதிக்கப்பட வில்லை.

இறுதியாக ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அங்கையும் சான்றிதழ் நோயாளியை அனுமதிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவே, இதனால் மருத்துவமனை வாசலில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பிரதீப் தன் தாயுடன் ஆம்புலன்ஸில் காத்திருந்தார்.

Read more – உத்திரபிரதேசத்தில் பொதுமுடக்கமா ? வேண்டாம் என்று தடுத்த உச்ச நீதிமன்றம்..

இதனால் ஆம்புலன்ஸில் மூச்சு திணறிக்கொண்டிருந்த ஜெயம்மாவின் உயிர் பிரிந்தது. பின் பிரதீப்,தனது தாயின் உடலை ஜகன்குடாவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளார். அதன்பிறகு, பிரதீப் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் RIP SOCIETY என்று பதிவிட்டு தனது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Exit mobile version