அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?


அதிகரிக்கும் கொரோனா!! டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்? – இன்று ஆலோசனை நடத்துகிறது டெல்லி அரசு.

டெல்லி,
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது; ஆனால் டெல்லி அரசு கடந்த மே மற்றும் ஏப்ரல் மாதத்துடன் ஏற்பட்ட பாதிப்பை 4ம் அலை என தெரிவித்து. அதற்கு காரணம், இடுகாடுகளில் இடம் இல்லாத அளவுக்கு உயிரிழப்பும்! பாதிப்பும்! டெல்லியில் ஏற்பட்டது.

இந்நிலையில், சமீப மாதங்களாக டெல்லியில் கொரோனா உயிரிழப்பு பூஜ்யம் என்ற நிலையிலும் பாதிப்பும் 10-க்கும் குறைவாக இருந்த நிலையில் சமீப நாட்களாக 100க்கும் அதிகமான பாதிப்பும், ஒற்றை இலக்கத்தில் உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், புதிய வகை மாறுபாடான “ஒமிக்ரான்” பாதிப்பும் கணிசமாக உயிரிழப்பும் ( 22 பேர் ) அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் டெல்லி அரசு இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இதில், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தலைமை செயலாளர் விஜய் தேவ், சுகாதார துறைக்கான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் புதிய வகை மாறுபாடான ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும்; புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக சர்வதேச பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்தும், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் விதிமுறைகளை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள மொத்த ஒமிக்ரான் பாதிப்பில் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்களில் தலைநகர் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version