இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டம்: தஞ்சையில் உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்திரை

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்தி துவங்கியது. தஞ்சையில் இன்று கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்.

வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பிரதமர் மோடி தலைமையில் 259 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விழா, குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரையிலான நடை பயணத்தை நேற்று துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே 75ம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது.

அவர்கள் இன்று காலை திருவையாறு வந்தனர். இங்கிருந்து அரசுகல்லூரி மற்றும் இசை கல்லூரி மாணவர்கள் நடை பயணம் துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் துவக்கி வைத்தார்.

இசைக்கல்லூரி மாணவர்களின் பஜனை, தெருக்கூத்து நடனம், சுதந்திரப் பேராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி, ராட்டிணம் சுழற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

திருவையாறு மாணவர்கள் தஞ்சை வந்த பின்னர் தஞ்சையிலிருந்து கல்லூரி மாணவர்கள் உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்திரை புறப்பட்டனர்.

இதனை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். இதில் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மார்ச் 14ம் தேதி யாத்திரை முடிவடைகிறது.

Exit mobile version